உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மரம் பெயர்ந்து விழுந்து ஏமப்பேரில் கோவில் சேதம்

மரம் பெயர்ந்து விழுந்து ஏமப்பேரில் கோவில் சேதம்

கள்ளக்குறிச்சி: ஏமப்பேர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையின் போது அரசமரம் பெயர்ந்து அருகிலிருந்த விநாயகர் கோவில் மீது விழுந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. கள்ளக்குறிச்சி அடுத்த ஏமப்பேர் பகுதியில் வீசிய பலத்த காற்றினால் பள்ளிக்கூட தெருவில் அரசு உயர்நிலைப் பள்ளி அருகே இருந்த பழமை வாய்ந்த அரசமரம் வேரோடு பெயர்ந்து, அருகில் இருந்த விநாயகர் கோவில் மீது விழுந்தது.

இதில் கோவில் கோபுரமும், பள்ளிக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு பைக்கும் சேதமடைந்தது.

தகவலறிந்த நகராட்சி ஊழியர்கள் நேற்று, சம்பவ இடத்திற்கு சென்று சாய்ந்த அரச மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !