உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தமிழக கோவில்கள் அனைத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தரிசனம்

தமிழக கோவில்கள் அனைத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தரிசனம்

 சென்னை: திருவண்ணாமலை கோவிலில், மாற்றுத்திறனாளி பெண், வரிசையில் நிற்க முடியாத நிலையில், சிறப்பு வழியில் அனுமதிக்க, கோவில் ஊழியர்கள் மறுத்த வீடியோவை பக்தர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

இதையடுத்து, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கூறிய தாவது:  தமிழக கோவில்கள் அனைத்திலும், கர்ப்பிணியர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரை, சிறப்பு வழியில் விரைவாக தரிசனம் செய்ய, அனுமதிக்க வேண்டும் என, அனைத்து கோவில் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அண்ணாமலையார் கோவிலில், மாற்றுத்திறனாளியை அனுமதிக்காதவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !