நடுவீரப்பட்டு மலையாண்டவர் கோவிலில் திருவாசகம் முற்றோதல்
ADDED :1 hours ago
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நடந்தது.
நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரர் கோவிலில்,புவனகிரி வெள்ளியம்பல சுவாமிகள் திருவாசக முற்றோதல் குழுவின் சார்பில் திருவாசகம் முற்றோதல் நடந்தது. நிகழ்ச்சியில் ஆனந்தி கிருபாநிதி தலைமையில், 30 சிவனடியார்கள் காலை முதல் மாலை வரை திருவாசகம் முற்றோதல் செய்தனர். நிகழ்ச்சியில் சுற்று பகுதியை சேர்ந்த பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் மற்றும் நிர்வாகக்குழுவினர் செய்திருந்தனர்.