வீரபாண்டி கவுமாரியம்மன் உண்டியலில் ரூ. 45.62 லட்சம் காணிக்கை
ADDED :1 hours ago
தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 19ல் நிறைவடைந்தது. திருவிழாவிற்காக 22 தற்காலிக உண்டியல்கள், 12 நிரந்த உண்டியல்கள் வைக்கப் பட்டிருந்தன. தற்காலிக உண்டியல்கள் ஜூன் 11ல் எண்ணப்பட்டன. நேற்று கோயில் வளாகத்தில் உள்ள 12 நிரந்தர உண்டியல்கள் எண்ணும் பணி நடந்தது. கோயில் செயல் அலுவலர் சுபிதா தலைமை வகித்தார். கல்லுாரி மாணவிகள், மகளிர் சுயஉதவி குழுவினர், தன்னார்வலர்கள், அறநிலையத்துறை பணியாளர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். காணிக்கையாக ரூ.45.62 லட்சம் இருந்தது. 42.25 மில்லிகிராம் தங்கம், 369 கிராம் வெள்ளி இருந்தது. இப்பணியை கோயில் கணக்காளர் பழனியப்பன் ஒருங்கிணைத்தார்.