உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் /  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரசாத தகவல் பலகை

 திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரசாத தகவல் பலகை

 திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரசாதங்களின் பெயர், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, விலைகள், எடை குறித்த தகவல் பலவை வைக்கப்பட்டுள்ளது.

கோயிலில் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, வடை, அப்பம், லட்டு, முறுக்கு பிரசாதங்கள் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. முன்பு கோயிலில் பிரசாதங்களின் பெயர், எடை, விலை அடங்கிய பெயர் பலகை மட்டுமே வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. சமீபத்தில் ஸ்ரீரங்கம் கோயிலில் அமைச்சர் ரமேஷ் ஆய்வு செய்தார். பிரசாதங்களின் தயாரிப்பு தேதி, காலாவதி தேதியுடன் தகவல் பலகை வைக்க வேண்டும் என அறிவுறுத்தினார். அதன்படி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் தகவல் வைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !