சாத்துார் வெங்கடாஜலபதி கோயிலில் ஆனி பிரம்மோத்ஸவ கொடியேற்றம்
ADDED :1 hours ago
சாத்துார்: சாத்துார் வெங்கடாஜலபதி கோயில் ஆனி பிரம்மோத்ஸவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
கொடியேற்ற விழாவில் கோயில் அர்ச்சகர் சீனிவாசன், கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம், செய்து திருவிழா கொடி ஏற்றினார். கொடி மரத்திற்கு தீப துாப ஆராதனை நடந்தது. ஹிந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் லட்சுமணன், பக்தர்கள் பலர் விழாவில் கலந்து கொண்டனர். 12 நாட்கள் நடை பெறும் இத் திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சுவாமி பல்வேறு வித வாகனங்களில் வீதியுலா நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஜூன் 30ல் காலை 8:45 மணிக்கு நடை பெறுகிறது. ஹிந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.