திருப்பூர் காமாட்சியம்மன் கோயிலில் அரசு – வேம்பு திருமணம்
ADDED :1 days ago
திருப்பூர், காமாட்சியம்மன் கோவில் வீதியில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில், நுாற்றாண்டு பழமையான அரச மற்றும் வேம்பு மரங்களுக்கு நேற்று திருமணம் செய்து வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக யாக பூஜை நடந்தது. காமாட்சியம்மன் கோவிலில் இருந்து சீர்வரிசை ஊர்வலம் வந்ததையடுத்து, சிறப்பு அலங்காரத்துடன் திருமண உற்சவம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.