சுந்தர விநாயகர் கோயில் வருஷாபிஷேகம்
ADDED :107 days ago
தேவகோட்டை; தேவகோட்டை ராம்நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ளது சுந்தர விநாயகர் கோயில். இக்கோயில் கும்பாபிஷேகம் சில ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இன்று இக்கோயில் வருஷாபிக நாளை முன்னிட்டு கோயிலில் கணபதி ஹோமம் உட்பட சிறப்பு ஹோமங்களை தொடர்ந்து சுந்தர விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. விநாயகருக்கு சிறப்பு அலங்காரத்தில் விசேஷ பூஜைகள் நடந்தன. தொடர்ந்து மாலையில் விநாயருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் பூஜைகள் நடந்தன. வருஷாபிக பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை டிரஸ்டி சுப்புராஜ் தலைமையில் நிர்வாக உறுப்பினர்கள் செய்து இருந்தனர்.