உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளக்குறிச்சி இந்திலி பாலமுருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு

கள்ளக்குறிச்சி இந்திலி பாலமுருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி பாலமுருகன் கோவிலில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது. பாலமுருகன் சுவாமிக்கு பல திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தி, வண்ண மலர்களால் அலங்காரம் செய்து வைக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு சத்ரு சமஹார திரிசதி அர்ச்சனை நடந்தது. பூஜைகளை ஆலய அர்ச்சகர் சிவசந்திரன் செய்து வைத்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !