உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமழிசை ஜெகந்நாதப்பெருமாள் கோவிலில் ஆனி பிரம்மோற்ஸவ தேரோட்டம்

திருமழிசை ஜெகந்நாதப்பெருமாள் கோவிலில் ஆனி பிரம்மோற்ஸவ தேரோட்டம்

திருவள்ளூர்; திருவள்ளூர் அடுத்த திருமழிசையில் பிரசித்தி பெற்ற ஜெகந்நாதப்பெருமாள் மற்றும் பக்திஸாரர் எனும் திருமழிசை ஆழ்வார்கோவிலில் ஆனி பிரம்மோற்ஸவ விழாவையொட்டி  கோலாட்டம், சிலம்பம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளுடன் பெரிய தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து தரிசனம் செய்தனர்.


திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் அமைந்துள்ளது ஜெகன்னா பெருமாள் கோவில். இங்கு இந்த ஆண்டு ஆனிப்பிரம்மோற்சவ திருவிழா கடந்த 25 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கருட சேவை கடந்த 27ம் தேதி காலை  நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா இன்று நடந்தது. காலை  ஜெகன்னாத பெருமாள் தேரில் எழுந்தருளினார். பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது தேர் தெற்கு மாடவீதியில் வந்த போது தேரின் இடபுற சக்கர சேதமடைந்து தேர் அருகிலிருந்த மின்கம்பத்தில் உரசியபடி நின்றது. இதையடுத்து தேர்சக்கரம் சீரமைக்கும் பணி நடந்து வந்தது. தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பத்திலிருந்து மின் வயர்களை அகற்றி தேர் தடையின்றி செல்ல வழி செய்தனர்.பின் பக்தர்கள் வடம்பிடித்து இழுத்த வந்த நிலையில் மேற்குமாட வீதி சந்திப்பு பகுதியில் மிளகு விநாயகர் கோவில் சாலை திருப்பத்தில் நின்றது. பின் ஒன்றரை  மணி நேரம் போராடி பக்தர்களை தேரை இழுத்து வந்தனர். நடந்த தேர்த்திருவிழாவில் திருமழிசை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !