கண்டமங்கலம் சுந்தரேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேக விழா
கண்டமங்கலம்; கண்டமங்கலம் அடுத்த மிட்டாமண்டகப்பட்டு சக்தி விநாயகர் மற்றும் அன்னை மீனாட்சி அம்பிகை உடனாகிய சுந்தரேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று நடந்தது. விழாவையொட்டி, நேற்று காலை 9:00 மணிக்கு மேல் விக்னேஸ்வர பூஜை மற்றும் நான்காம் கால யாகசாலை பூஜை நடந்தது. மாலை 4:30 மணிக்கு ஐந்தாம் கால யாகசாலை பூஜை நடந்தது. கும்பாபிஷேக தினமான இன்று காலை 7:30 மணிக்கு மேல் 6ம் கால யாகசாலை பூஜையும், 10:30 மணிக்கு யாத்ராதானம், கலசங்களில் புனித நீர் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து 10.45 மணிக்கு விமானம் மற்றும் ராஜகோபுரத்திற்கும், 11:00 மணிக்கு சக்தி விநாயகர், 11:15 மணிக்கு அன்னை மீனாட்சி அம்பிகை உடனாகிய சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு மற்றும் கோவில் நிர்வாகிகள், கிராம மக்கள் செய்திருந்தனர்.