உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகத்தை ஆபரணமாக அணிவதன் காரணம் என்ன

நாகத்தை ஆபரணமாக அணிவதன் காரணம் என்ன

சிவன் தனது தலை, கழுத்து, கைகளில் பாம்பை ஆபரணமாக அணிந்திருப்பார். இதற்கு என்ன காரணம் தெரியுமா...

மனிதனுக்கு கண், காது, மூக்கு, வாய், மெய் என்னும் ஐம்புலன்கள் உள்ளன. இவை தீயவழிகளில் ஈடுபடும் போது, விஷம் கக்கும் நாகம் போல துன்பத்திற்கு ஆளாக நேரிடும். இவற்றை அடக்கி நல்வழியில் செலுத்தினால் அழகூட்டும் ஆபரணமாக மாறும்.

இதை உணர்த்தவே சிவன் ஐந்துதலை நாகத்தை  ஆபரணமாக அணிந்துள்ளார். பாம்பின் ஐந்து தலையும் ஐம்புலனைக் குறிக்கும். தங்கம், வெள்ளி, பித்தளையால் ஆன நாகத்தை சிவலிங்கத்தின் மீது ஆபரணமாக சாத்துவர். நாக லிங்கத்தை தரிசித்தால் தீய ஆசைகள் மறையும். நல்ல புத்தி ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !