உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கவிதையாக வாழ்பவனே கவிஞன்: பாரதியார்

கவிதையாக வாழ்பவனே கவிஞன்: பாரதியார்

* கடவுளை நம்பினோர் கைவிடப்படார். இதுவே பக்தி.
* நம் இஷ்டப்படி உலகம் நடக்கவில்லை. தெய்வத்தின் இஷ்டப்படியே நடக்கிறது.
* ஒருவன் தனக்கு தானே நட்பானால் உலகமே நட்பாகி விடும்.
* முயற்சியில் தவறு ஏற்படுவது இயல்பு. அதை திருத்திக் கொள்.
* ஒழுக்கம் இல்லாத தெய்வ பக்தி வெறும் வெளிவேஷம்.
* பிற உயிர்களிடம் அன்பு காட்டு.  உன் சக்தி வளரும்.
* மனதை கட்டி ஆள்வதற்கு மந்திரத்தை உச்சரிப்பதே வழி.
* அருமையான உள்ளக் காட்சிகளை எளிய நடையில் தருவதுதான் நல்ல கவிதை.
* நமது எண்ணத்தை மீறியும் காலசக்தி வேலை செய்கிறது.
* பிறருக்கு வயிறு நிறைய உணவு தருவதுதான் உயர்ந்த தர்மம்.
* பாட்டுக்கு தாளமே ஒழிய தாளத்திற்குப் பாட்டில்லை.
* காதல், திருமணம், தாலாட்டுப்பாடல்கள் நின்றுவிட்டால் சுடுகாடுதான் மிச்சமிருக்கும்.
* உலக நாகரிகங்களை காட்டிலும் நம் ஹிந்து தர்மம் அதிக சக்தி கொண்டது.
* எதிலும் பற்றில்லாமல் செயல்படு என்பதையே ஹிந்து தர்மம் சொல்கிறது.
* கவிதை எழுதுபவன் கவிஞன் அல்ல. கவிதையாக வாழ்பவனே கவிஞன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !