திருமலைக்கேணியில் 250 காவடி எடுத்து உலக சாதனை முயற்சி
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தனும் காவடி என்ற தலைப்பில் முருகன் பக்தி பாடல்களுக்கு 3 வயது முதல் 25 வயது வரை உள்ள 250 பெண்கள் காவடி சுமந்து பரதம் ஆடி உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசாமி கோவிலில் ஈஷா புக் ஆஃப் அவார்டும்,இந்து சமய அறநிலைத்துறையும் இணைந்து நடத்திய உலக சாதனை பரதநாட்டியம் நிகழ்ச்சி நடந்தது. இதில் மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, திண்டுக்கல், தேனி, திருச்சி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 3 வயது முதல் 25 வயது உடைய 250 பெண்கள் காவடி ஏந்தி கந்தனும் காவடியும் என்ற தலைப்பில் விநாயகர் மற்றும் முருக பக்த பாடல்களுக்கு ஆறு நிமிடங்களில் தொடர்ந்து பரத நாட்டியம் ஆடி உலக சாதனையை நிகழ்த்தினர். இந்த நிகழ்ச்சியை ஈஷா புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் ஒருங்கிணைப்பாளர் கவிதா ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உலக சாதனை புரிந்த அனைத்து பெண்களுக்கும் ஈஷா புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் சான்றிதழ்கள் மற்றும் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.