வத்திராயிருப்பு ஸ்ரீனிவாச பெருமாள், ஆவடையம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED :2 days ago
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு ஸ்ரீனிவாச பெருமாள், ஆவடையம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று காலை மங்கல வாத்தியம், விக்னேஸ்வர பூஜை, ரக்சாபந்தன், இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், கடம் புறப்பாடு நடந்தது. பின்னர் காலை 9:00 மணிக்கு மேல் கோயில் கோபுரத்தின் கலசத்திற்கு புனித நீரால் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.