தெற்குவிருத்தாங்கன் செல்லியம்மன்கோவில் மகா கும்பாபிஷேகம்
சேத்தியாத்தோப்பு: ஜூலை 6–: தெற்குவிருத்தாங்கன் செல்லியம்மன்கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
சேத்தியாத்தோப்பு அருகே தெற்கு விருத்தாங்கன் கிராமத்தில் உள்ள செல்லியம்மன்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 25ம் தேதி பந்தல்கால் நடும் முகூர்த்ததுடன் துவங்கியது.
கடந்த 3 ஆம் தேதி மகாகணபதி ஹோமம், வாஸ்து ஹோமம், காப்பு கட்டுதல், கும்பலங்காரம், தீபாராதனை நடந்தது.
நேற்று முன்தினம் விசேஷ சாந்தி, சூர்ய பூஜை, இரண்டாம் கால யாக பூஜைகள், கன்யா பூஜை, மூன்றாம் கால யாக பூஜையும், இரவு தம்பதியர் பூஜை, மகா தீபாராதனை நடந்தது.
நேற்று காலை 8.00 மணிக்கு கோ பூஜை, சூர்ய பூஜை, திரவிய ஹோமம், தீபாராதனையும், 9.30 மணிக்கு கிழக்கு செல்லியம்மன்கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
காலை 10:15 மணிக்கு யாக சாலையிலிருந்து கும்ப கலசம் புறப்பாடாகி செல்லியம்மன் கோவில் விமான கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.
அதனை தொடர்ந்து, காலை 10.45 மணிக்கு மூலவர் செல்லியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள், செய்திருந்தனர்.