விருத்தாசலம் முருகன் கோவில்களில் தேய்பிறை சஷ்டி வழிபாடு
விருத்தாசலம்: விருத்தாசலம் கோவில்களில் முருகன் சுவாமிக்கு, தேய்பிறை சஷ்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத சண்முக சுப்ரமணியர், 28 சிவ ஆகம சன்னதியில் உள்ள குமரேஸ்வரர் சுவாமிகளுக்கு இன்று காலை 7:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. மாலை 4:00 மணிக்கு சந்தனக்காப்பு அலங்காரத்தில் சுவாமிகள் அருள்பாலித்தனர். மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளிக்கவசம் சாற்றி தீபாராதனை நடந்தது. மாலை 4:00 மணியளவில் சந்தனக்காப்பு அலங்காரத்தில் சுவாமிகள் அருள்பாலித்தனர். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல், கருவேப்பிலங்குறிச்சி சாலையில் உள்ள வேடப்பர் சுவாமி, கண்டியங்குப்பம் வெண்மலையப்பர், முதனை செம்பையனார் கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.