உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேதக்கல்வியே கலாசாரத்தின் அடையாளம் அமைச்சர் ஜான் புகழாரம்

வேதக்கல்வியே கலாசாரத்தின் அடையாளம் அமைச்சர் ஜான் புகழாரம்

பாலக்காடு: வேதங்களை போற்றுவதும், அவற்றை பயில்வதும் இந்திய கலாசாரத்தின் அடையாளமாகும், என மாநில போக்குவரத்து துறை அமைச்சர் ஜான் தெரிவித்தார்.

கேரள மாநிலம், பாலக்காட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்த போக்குவரத்து துறை அமைச்சர் ஜான், சிருங்கேரி சாரதாம்பாள் கோவிலை பார்வையிட்டார். சிருங்கேரி மட நிர்வாக குழு தலைவர் கரிம்புழை ராமன் வரவேற்றார்.

அதன்பின், வேத மாணவர்களுடன் உரையாற்றிய அமைச்சர் பேசியதாவது: வேதங்களை போற்றுவதும், அவற்றை பயில்வதும் இந்திய கலாசாரத்தின் மிகச்சிறந்த அடையாளமாகும். பாரம்பரிய பாதையில் தடம் பிறழாமல் வேதங்களை கற்றுவரும் மாணவர்களின் அர்ப்பணிப்பை பாராட்டுகிறேன். வேதங்களை ஓதுவதும், அதைக் கேட்பதும் நமது மூளையில் ஒருவிதமான நேர்மறையான அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. இது, நமது சிந்தனைகளை சீரமைத்து, நல்வழியில் நம்மை வழிநடத்துகிறது.

ரிக், யஜுர், சாம மற்றும் சுக்ல யஜுர் வேதங்களின் பாராயணத்தை கேட்பது பெரும் பாக்கியம். இத்தகைய மாணவர்களின் கல்வி முறையை நேரில் காண்பது மனதிற்கு மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வாறு, பேசினார். நிகழ்ச்சியில், கேரள பிராமண சபையின் முன்னாள்  துச்செயலாளர்சிவராமகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !