மதுரை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ திருத்தேர் உலா
மதுரை ; ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில் ஆனி மாத பிரம்மோற்சவ திருத்தேர் உலா நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மதுரை முனிச்சாலை பகுதியில் ஸெளராஷ்ட்ர பிராஹ்மண தர்ம பரிபாலன ஸபைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில் ஆனி மாத பிரம்மோற்சவம் கடந்த 3ம் தேதி கொடி ஏற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில் சுவாமி புறப்பாடாகி பல்வேறு வாகனங்களில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதன் முக்கிய நிகழ்வான ஸ்ரீ நிவாசப் பெருமாள் திருக்கல்யாண வைபவம் கடந்த 09ம் தேதி நடந்தேறியது. அதன் தொடச்சியாக இன்று காலை 05:30 மணி துவங்கி 06:30 மணிக்குள்ளாக ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோவிலிருந்து புறப்பாடாகி புதிய செய்யப்பட்ட 26 அடித் திருத்தேரில் எழுதருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தெற்கு தொகுதி எம்.எல்.ஏ கோபிசன் மக்களுடம் இணைந்து தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார். இதில் பெண்கள், ஆண்கள், என நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிந்த கோவிந்த கோஷம் விண்ணை பிளக்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.திருத்தேர் உலா வெங்கடாசலபதி அய்யங்கார் தெரு, காமராஜர் சாலை, கீழவாசல் வழியாக வைகை தென்கரை திருத்தேர்வடம் வந்து சேரும் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது.