உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயில் வீதியில் பக்தர்கள் ஓய்வு : கூடுதல் ஓய்வுகூடம் அமைக்கப்படுமா?

ராமேஸ்வரம் கோயில் வீதியில் பக்தர்கள் ஓய்வு : கூடுதல் ஓய்வுகூடம் அமைக்கப்படுமா?

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு போதுமான இலவச ஓய்வு கூடம் இல்லாததால், கோயில் ரத வீதி சாலையில் ஓய்வெடுக்கும் அவல நிலை உள்ளது.


ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் ஏராளமான வட, தென் மாநில பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக கோயில் ரதவீதியில் இலவச ஓய்வறை கூடம் இல்லாமல், பெரிதும் பாதித்தனர். இந்நிலையில் ஜன.,யில் கோயில் சன்னதி தெருவில் சிறிய அளவில் இலவச ஓய்வறை கூடம் அமைத்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். இதில் பக்தர்கள் பலரும் ஓய்வெடுக்கவும், இயற்கை உபாதை செல்ல போதுமான வசதி இல்லாமல் உள்ளது. இதனால் பக்தர்கள் கோயில் கிழக்கு ரதவீதி சாலை ஓரத்தில் அமர்ந்து ஓய்வெடுக்கின்றனர். மேலும் சிலர் சுகாதாரம் இன்றி உணவு சாப்பிடும் அவல நிலை உள்ளது. எனவே தற்போதைய ஓய்வறை அருகிலே காலியாக உள்ள இடத்தில் கூடுதலாக இலவச ஓய்வறை கூடம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !