காஞ்சிபுரத்தில் சங்கராச்சாரியார்கள் சாதுர்மாஸ்ய விரதம் 29ல் தொடக்கம்
ADDED :12 hours ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓரிக்கையில் சங்கராச்சாரியார்கள் இருவர், சாதுர்மாஸ்ய விரதத்தை வரும் 29ல் தொடங்குகின்றனர்.
காஞ்சி சங்கராச்சாரியார்கள் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகிய இருவரும், காஞ்சிபுரம் ஓரிக்கையில் உள்ள மஹா சுவாமிகள் மணிமண்டப வளாகத்தில் சாதுர்மாஸ்ய விரதத்தை அனுஷ்டிக்க உள்ளனர்.
இந்த ஆண்டுக்கான வியாச பூஜை மற்றும் சாதுர்மாஸ்ய விரதங்கள் வரும் 29-ல் தொடங்கி, செப்டம்பர் 26-ம் தேதி வரை நடைபெற உள்ளன.
ஓரிக்கையில் உள்ள சந்திரமவுலீஸ்வரர் பூஜா மண்டபத்தில் இந்த விரத வழிபாடுகள் நடைபெறுகின்றன. இதில் பக்தர்கள் பெருமளவில் பங்கேற்று, சந்திரமவுலீஸ்வர சுவாமியின் அருளையும், குருநாதர்களின் ஆசிகளையும் பெற்று பயனடையுமாறு காஞ்சி காமகோடி பீடம் சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.