அதிசய ஆட்சி
ADDED :73 days ago
கொடுங்கோல் மன்னர் நம்ரூத் ஆட்சியில் புதுமைக்கு பஞ்சமில்லை. அவற்றில் சில.
* திருடு போன பொருளைக் கண்டறிய ‘தபேலா’ ஒன்றை வைத்திருந்தார் மன்னர். பொருளை இழந்தவர் இந்த தபேலாவில் ஒருமுறை தட்டினால் போதும். அது ‘யார் திருடியது? பொருள் எங்கு மறைக்கப்பட்டுள்ளது? என்ற விபரத்தை சொல்லும்.
* பெண் பொம்மை ஒன்று இருந்தது. அதனிடம் காணாமல் போனவர் பற்றிச் சொன்னால் உடனடியாக சொல்லி விடும்.
இது போல அதிசயக் கருவிகள் மட்டுமின்றி தான் ஏறிச் செல்வதற்கு தங்கம், வெள்ளியால் ஆன பல்லக்கு வைத்திருந்தார். அது நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆணவத்தால் ‘நானே இறைவன்’ என பிரகடனம் செய்தான்.
நாடெங்கும் தன்னைப் போலவே உருவச்சிலை செய்து வணங்க வேண்டும் எனக் கட்டளையிட்டான்.