உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேணுகோபால சுவாமி கோவிலில் யோக நரசிம்மருக்கு சுவாதி வழிபாடு

வேணுகோபால சுவாமி கோவிலில் யோக நரசிம்மருக்கு சுவாதி வழிபாடு

நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமி கோவிலில் யோக நரசிம்மருக்கு சுவாதி சிறப்பு வழிபாடு நடந்தது. நெல்லிக்குப்பம், பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் யோக நரசிம்மருக்கு தனி சன்னதி உள்ளது. இந்த நிலையில், நேற்று சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, யோக நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனமும் தீபாராதனையும் நடந்தது. யோக நரசிம்மர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !