உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குழந்தை முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி உற்சவம்; பக்தர்கள் நேர்த்திக்கடன்

குழந்தை முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி உற்சவம்; பக்தர்கள் நேர்த்திக்கடன்

காட்டுமன்னார்கோவில்: குழந்தை முத்துமாரியம்மன் கோவில் தீமிதி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். காட்டுமன்னார்கோவில் பெரியார் நகர் குழந்தை முத்துமாரியம்மன் கோவில் 18ம் ஆண்டு ஆடி மாதம் தீமிதி உற்சவம் கடந்த 12ம் தேதி பக்தர்களுக்கு காப்புக்கட்டி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒன்பது நாட்கள் நடந்த உற்சவத்தையொட்டி தினம் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனைகள் நடந்தது. 19ம் தேதி அம்மன் தேரோட்டமும், 20ம் தேதி தீமிதி உற்சவம் நடந்தது. இதனையொட்டி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தது. பின்னர் கோவில் பூசாரி பூக்கரகம் எடுத்து கோவில் வலம் வந்து பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி தீமிதித்து வேண்டுதல் காணிக்கையை நிறைவேற்றினர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !