அனைவரிடமும் அன்பு காட்டு: புத்தர்
* அன்பு காட்டினால் பகை என்பதே இருக்காது.
* அறிவு, நேர்மை, உறுதி இருந்தால் அனைத்தையும் வெல்லலாம்.
* ஒழுக்கம் உள்ளவனே சிறந்தவன். அவனை யாரும் குறை சொல்ல மாட்டார்கள்.
* நீ செய்யும் ஒவ்வொரு செயலும், உன்னை நிழல் போல தொடரும்.
* நல்லவர்கள் இப்பிறவியில் மட்டுமல்ல; அடுத்த பிறவியிலும் ஆனந்தமாக வாழ்வர்.
* பாவம் செய்தவர் தண்டனையில் இருந்து தப்பவே முடியாது.
* எதிர்ப்பும், தடையும் இருந்தால் தான் முன்னேற்றம் சாத்தியம்.
* பூவை விரும்பினால் அதை பறிப்பாய்; அன்பு காட்டினால் செடிக்கு தண்ணீர் ஊற்றுவாய்.
* நல்லவர்களின் புகழ் எல்லா திசையிலும் பரவி நிற்கும்.
* கோபத்தை மென்மையாலும், தீமையை நன்மையாலும், பொய்யை உண்மையாலும் வெற்றி கொள்.
* நல்ல விஷயங்களை கடைபிடிப்பதில் வைராக்கியமாக இரு.
* பிறர் பாராட்ட வேண்டும் என எதிர்பார்த்து நல்லதைச் செய்யாதே.
* மனதை அடக்கும் அறிவாளிகளே உண்மையான பணிவாளர்கள்.
* முட்டாளாக நுாறு ஆண்டுகள் வாழ்வதை விட, அறிவாளியாக ஒருநாள் வாழ்வது சிறந்தது.
* வெற்றி, தோல்வியை பொருட்படுத்தாதவன் மகிழ்ச்சியாக இருப்பான்.