துன்பம் தீர வழி சொல்கிறார் ராமானுஜர்
ADDED :61 days ago
* பெருமாளின் காலை பிடித்துக் கொள். துன்பம் தீரும்.
* பெருமாள் கோயிலுக்கு செல்; தொண்டு செய்.
* பக்தரின் மனதை புண்படுத்தாதே.
* கோயில் பிரசாதத்தை சாப்பிடு.
* திவ்ய பிரபந்த பாடலை பாடு.
* முன்னோர் சொல்லிய புண்ணிய செயல்களை, கேள்வி கேட்காமல் செய்.
* கண், காது, மூக்கு, நாக்கு, உடல் ஆகிய புலன்களை கட்டுப்படுத்து.
* குருநாதரின் பெருமைகளை நினைவில் கொள்.
* பெரியவர்களை பார்த்தால் காலில் விழு.
* பகவானை வணங்குவது போல் குருநாதரை வணங்கு.
* முற்பிறவியில் செய்த பாவமே துன்பமாக வருகிறது.
* தினமும் பூத்த பூவை மாலையாக தொடு. பெருமாளுக்கு கொடு.
* நாராயணா என்ற மந்திரத்தை எப்போதும் சொல்.
* கோயில் பிரகாரத்தை மெதுவாக சுற்றுவது அவசியம்.
* நல்ல செயல்களை தொடர்ந்து செய். புண்ணியம் சேரும்.
* குருவை தினமும் வணங்கு. பெருமாளின் அருள் கிடைக்கும்.