உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில் நாளை தேர் திருவிழா

செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில் நாளை தேர் திருவிழா

பாகூர்: சேலியமேடு செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில், செடல் மற்றும் தேர் திருவிழா நாளை நடக்கிறது.


பாகூர் அடுத்த சேலியமேட்டில் பிரசித்தி பெற்ற செங்கழுநீர் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் 10 நாட்கள் ஆடி பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவ விழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. முக்கிய நிகழ்வான செடல் மற்றும் தேர் திருவிழா நாளை (31ம் தேதி) மாலை 4:30 மணிக்கு நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி பாலமுருகன், மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !