உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாதயாத்திரை சென்ற துறவிக்கு வரவேற்பு

பாதயாத்திரை சென்ற துறவிக்கு வரவேற்பு

திருவாடானை: மத்தியபிரதேசத்திலிருந்து 11 ஜோதிர்லிங்க தரிசனம் செய்ய சென்ற பெண் துறவிக்கு வரவேற்பு அளிக்கபட்டது.

மத்திய பிரதேசத்திலிருந்து ராமேஸ்வரம் நோக்கி 2 ஆண்டுகளாக பாதயாத்திரை சென்று கொண்டிருக்கும் துறவி சுமன் அம்மாவிற்கு திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலத்தில் ஆன்மிக பக்தர்கள் சார்பில் வரவேற்பு அளிக்க பட்டது.

குளிர், வெயில் என பல்வேறு காலநிலைகளை பொருட்படுத்தாமல் பலஆயிரம் கி.மீ. நடந்து வரும் இவரது சிவபக்தியையும், மன உறுதியையும் பாராட்டி திருவாடானையை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சேர்ந்த உதயகுமார், தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

துறவியிடம் ஆசி பெற்றனர். துறவி ராமேஸ்வரத்தை நோக்கி பயணத்தை மேற்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !