கன்னட ஆடி மாத சிவ பூஜை கோலாரில் 13ல் துவக்கம்
தங்கவயல்: கோலார் தாலுகா நரசாபுரா அருகே நாகலாபுரா கிராமத்தில், வீர சைவ சிம்மாசன சமஸ்தான மடம் உள்ளது. இந்த மடத்தின் சார்பில் கன்னட ஆடி மாத சிவ பூஜை, கோலாரின் அரளேபேட்டையில் உள்ள பசவேஸ்வர சுவாமி கோவிலில் நாளை மறுதினம் துவங்குகிறது.
கோலார், சிக்கபல்லாபூர், துமகூரு, பெங்களூரு ரூரல், பெங்களூரு நகர மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் நடக்கும் பூஜை, செப்டம்பர் 10ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்த பூஜையை மடாதிபதி ஸ்ரீதேஜேஷ் லிங்க சிவாச்சாரிய சுவாமிகள் நடத்துகிறார்.
உலக அமைதிக்காக நடக்கும் பூஜையில், மகா சிவ பூஜை, சிவானுபவ நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன. பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டு, பூஜையை வெற்றிகரமாக நடத்த ஆதரவு தருவதுடன், இறைவனின் அருளைப் பெற்று செல்லுங்கள் என்று, வீர சைவ சிம்மாசன சமஸ்தான மடத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.