உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூம்புகார் காவேரி கடல் சங்கமத் துறையில் புனித நீராடி பக்தர்கள் வழிபாடு

பூம்புகார் காவேரி கடல் சங்கமத் துறையில் புனித நீராடி பக்தர்கள் வழிபாடு

மயிலாடுதுறை: ஆடி அமாவாசை : பூம்புகார் காவேரி கடல் சங்கமத் துறையில் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜை செய்து வழிபாடு செய்தனர்.


மயிலாடுதுறை  மாவட்டம் சீர்காழியை அடுத்த பூம்புகாரில் காவேரி ஆறு கடலில் கலக்கும் காவேரி சங்கமுக தீர்த்தத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் ஆடி அமாவாசை முன்னிட்டு புனித நீராடி  தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர். புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய பட்ச அமாவாசை, ஆடி, தை மாதங்களில் வரக்கூடிய அமாவாசை தினங்களில் இறந்த தங்கள் முன்னோர்களுக்கு பலி கர்ம பூஜைகள் மற்றும் தர்பணம் செய்து தானம் கொடுத்தால் முன்னோர்களின் அருளாசி கிடைக்கும் என்பது ஐதீகம்.  இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு பூம்புகார் கடற்கரையில் திரண்ட மக்கள் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு பச்சரிசி, கீரை வகைகள், காய்கறிகள், எள் உள்ளிட்ட பொருட்களை வைத்து வேதியர்கள் மற்றும் ஆச்சாரியர்கள் துணை கொண்டு பலிகர்ம பூஜைகள், தர்பணம் செய்தும்  தானம் கொடுத்தும் வழிபாடு மேற்கொண்டனர்.  இதில் மயிலாடுதுறை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள் ,வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து சங்கம தீர்த்தத்தில் புனித நீராடி தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர். மக்களின் வசதிக்காக மயிலாடுதுறை மற்றும் சீர்காழியிலிருந்து சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பூம்புகார் கடலோர குழும போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !