உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பகவான் நாமத்தைச் சொல்: காஞ்சி மஹாபெரியவர்

பகவான் நாமத்தைச் சொல்: காஞ்சி மஹாபெரியவர்

* எலிக்கு தினமும் பல் வளரும். அதனால் எதிலாவது பல்லைத் தேய்த்து குறைத்து கொள்ளும். அதுபோல பகவான் நாமத்தைச் சொல்லி மனதிலுள்ள தீயஎண்ணத்தை குறைக்க வேண்டும்.  
* நாக்கு தான் முதல் எதிரி. அது கேட்பதை எல்லாம் சாப்பிட்டால் உடல்நலம் கெடும்.
* இலவசமாக எதையும் வாங்குவதில்லை; பிறரிடம் கடுமையாக நடப்பதில்லை என மனதில் உறுதி கொள்ளுங்கள்.  
* கட்டுப்பாடற்ற பேச்சு வீண் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.  
* சிரமம் வந்தால் தான் கடவுளை வணங்குவது என நினைக்கக் கூடாது.  
* நான், எனது என்னும் சுயநல சிந்தனைகளை கைவிட்டால் வாழ்வு சிறக்கும்.   
* செயலில் மட்டும் ஈடுபடு. அதற்கான காரண காரியத்தை கடவுள் புரிய வைப்பார்.
* தானம், வழிபாடு, திருத்தல யாத்திரை என புண்ணியத்தை தேடுங்கள்.  
* வெளித்தோற்றம் அழகாக இல்லாவிட்டாலும் நற்பண்புகளால் அழகாக மாற முடியும்.
* சம்பாதிக்கும் பணத்தை தர்ம வழியில் செலவழித்தால் பாவம் தீரும்.
* அறிவு, அழகு, செல்வம் ஆகியவற்றால் மனிதன் கர்வப்படக் கூடாது.
* உடுத்தும் உடையின் அளவை மனிதன் நிர்ணயிக்கிறான். ஆனால் மனிதனின் ஆயுளை கடவுள் நிர்ணயிக்கிறார்.
* பழி தீர்க்கும் எண்ணம், பொறாமையை மனதை விட்டு துாக்கி எறியுங்கள். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !