உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணியில் பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருப்பு

திருத்தணியில் பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருப்பு

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நேற்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், மூன்று மணி நேரம் காத்திருந்து மூலவரை வழிபட்டனர்.

திருத்தணி முருகன் கோவிலில் நேற்று காலை 6:00 மணி முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். இதனால், பொதுவழியில் பக்தர்கள் மூன்று மணி நேரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.

மேலும், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக ஆட்டோ, பேருந்து, வேன் போன்ற வாகனங்கள் செல்ல கோவில் நிர்வாகம் தடை விதித்தது.

இருப்பினும், மலைக்கோவில் படாசெட்டிக்குளம் பகுதியில் போக்குவரத்து நெரிசலால் பக்தர்கள் சிரமப்பட்டனர். பக்தர்கள் வசதிக்காக, 100 இலவச சிறப்பு பேருந்துகள் கோவில் நிர்வாகம் சார்பில் இயக்கப்பட்டது.

முன்னதாக, அதிகாலை 4:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தங்ககிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு தங்கத்தேரில் உற்சவர் முருகன், வள்ளி – தெய்வானையுடன் தேர்வீதியில் வீதியுலா வந்தார்.

திருத்தணி ஏ.எஸ்.பி., ஷூபம் திமான் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !