ஸ்ரீருக்மணி க்ருஷ்ண சந்திர விவாஹ மஹோத்சவம்
ADDED :2 days ago
அவிநாசி: அவிநாசி, மங்கலம் ரோடு சுப்பையா சுவாமி திருமடத்தில், அவிநாசி குருக்ருபா சேரிடபிள் டிரஸ்ட் சார்பில், ஸ்ரீ ருக்மணி க்ருஷ்ண சந்திர விவாஹ மஹோத்சவம் நடந்தது.
முன்னதாக சம்பிரதாய உஞ்சவிருத்தி, சீர் கொண்டு வருதல், விவாஹரக் ஷாபந்தன அங்குரார்ப்பண பூஜைகள், நாம சங்கீர்த்தனம் நடந்தன.
தொடர்ந்து ஸ்ரீ க்ருஷ்ணசந்திர ருக்மணி தேவி விவாஹம், தீபாராதனை, ஆஞ்சநேய உத்சவம் நடைபெற்றது.
திருவிளக்கு பூஜையில், 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் குருக்ருபா சேரிடபிள் டிரஸ்ட் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.