உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி: குமரசுப்ரமணிய சுவாமி கோயில் அன்னாபிஷேக விழா

பரமக்குடி: குமரசுப்ரமணிய சுவாமி கோயில் அன்னாபிஷேக விழா

பரமக்குடி: பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண மகா ஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த குமரசுப்ரமணிய சுவாமி கோயில் உள்ளது.

சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள கோயிலில் அன்னாபிஷேகத்தை ஒட்டி பல்வேறு திரவியங்கள், பால், பழச்சாறு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அன்னத்தால் அபிஷேகம் செய்யப்பட்டு, அன்னம் மற்றும் பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.

பின்னர் அனைவருக்கும் பிரசாதங்கள் அன்னதானம் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !