உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்ரகாளியம்மன் கோயிலில் 48ம் ஆண்டு உற்ஸவம் பூக்குழி இறங்கிய பக்தர்கள்

பத்ரகாளியம்மன் கோயிலில் 48ம் ஆண்டு உற்ஸவம் பூக்குழி இறங்கிய பக்தர்கள்

கீழக்கரை: கீழக்கரை தட்டான் தோப்பு தெருவில் உள்ள நாராயணசுவாமி, பத்ரகாளி அம்மன் கோயிலில் 48ம் ஆண்டு உற்ஸவம் நடந்தது. ஆக., 7ல் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. தொடர்ந்து உற்ஸவ வேளைகளில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. ஆக.14ல் மேலக்கொடிகால் முத்துமாரியம்மன் கோயிலில் இருந்து பால்குட ஊர்வலம் கோயிலை வந்தடைந்தது. பகலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஆக.14ல் வளாகத்தில் பூ வளர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 11:00 மணிக்கு பூங்கரகம் மற்றும் அக்னி சட்டி ஊர்வலம் புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்தது. ஏராளமான நேர்த்திக்கடன் பக்தர்கள் பூக்குழி இறங்கினர். நேற்று முன்தினம் காலை மஞ்சள் நீராட்டு வழிபாட்டுடன் விழா நிறைவடைந்தது. ஏற்பாடுகளை ஹிந்து நாடார் உறவின்முறை சங்கத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !