உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓரிக்கை மஹா ஸ்வாமிகள் மணிமண்டபத்தில் காஞ்சி மடாதிபதிகளுக்கு மரியாதை

ஓரிக்கை மஹா ஸ்வாமிகள் மணிமண்டபத்தில் காஞ்சி மடாதிபதிகளுக்கு மரியாதை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓரிக்கையில் உள்ள மஹா ஸ்வாமிகள் மணிமண்டபத்தில், சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டுள்ள காஞ்சி மடாதிபதிகளுக்கு நேற்று, தென் இந்திய புரோகிதர்கள் சங்கத்தினர், பிக்‌ஷாவந்தனம் செய்து மரியாதை சமர்ப்பித்தனர்.


காஞ்சிபுரம் ஓரிக்கையில் உள்ள மஹா ஸ்வாமிகள் மணிமண்டபத்தில், காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய மடாதிபதி சத்ய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருவரும் கடந்த மாதம் 29ம் தேதி முதல், சந்திரமவுலீஸ்வர பூஜைகளுடன் , சாதுர்மாஸ்வய விரதம் மேற்கொண்டு வருகின்றனர். தினமும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மஹா ஸ்வாமிகள் மணிமண்டபத்திற்கு வரும் பக்தர்கள்,, காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடளிடம் ஆசி பெற்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று தென் இந்திய புரோகிதர்கள் சங்கத்தின் தலைவர் கணேசன், செயலர் பாலசுப்பிரமணியன் மற்றும் திரளான சங்க உறுப்பினரகள் காஞ்சி மடாதிபதிகள் இருவரையும் தரிசனம் செய்து, பிக்‌ஷாவந்தனம் செய்து மரியாதை சமர்ப்பித்தனர். தொடர்ந்து, காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அனைவருக்கும் அருளாசி வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !