காளி அம்பாள் கோவிலில் ராகு கேது பிரதிஷ்டை
வானுார்: கிளியனுார் அடுத்த ஞானக்கல்மேடு கிராமத்தில் அமைந்துள்ள சுயம்பு பஞ்சபூதகாளி அம்பாள் கோவிலில் ராகு–கேது பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகம் நடந்தது.
நாக சதுர்த்தியை முன்னிட்டு காலை 9:00 மணிக்கு, நாக பிரதிஷ்டை சிறப்பு பூஜைகள் நடந்தன.
முன்னதாக கோவில் வளாகத்தில் யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் கொண்டு ராகு–கேது சிலைகளுக்கு பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, ராகு–கேதுவிற்கு பால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. சுயம்பு பஞ்ச பூதகாளி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
வானுார் ஒன்றிய முன்னாள் சேர்மன் சிவா கலந்து கொண்டார். இதில், ஞானக்கல்மேடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
உபயதாரர்கள் கோயம்புத்துாரைச் சேர்ந்த மாதவன் ஜோதிடர், வல்லம் ஏழுமலை புவனேஷ்வரி, அச்சிரம்பட்டு வினோத்குமார் நாதபிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான, ஏற்பாடுகளை கிளியனுார் ஊராட்சி மன்ற தலைவர் வேலு சுதா செய்திருந்தனர்.