உமையநாயகி அம்மன் கோயில் நடை ஒரு மாதத்திற்கு பின் திறப்பு
ADDED :5 hours ago
சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.தரைக்குடியில் உள்ள உமையநாயகி அம்மன் கோயில் நடை ஒரு மாதத்திற்கு பின் திறக்கப்பட்டது.
சாயல்குடி அருகே எஸ்.தரைக்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற உமையநாயகி அம்மன் கோயில் உள்ளது. ஆடி மாதத்தில் அம்மன் இங்கிருந்து ராமேஸ்வரத்தில் உள்ள தீர்த்தங்களில் புனித நீராடுவதற்காக செல்வதாக ஐதீகம் உள்ளது. இதனால் கோயில் நடை ஆடி முதல் நாளன்று (ஜூலை 17) அடைக்கப்பட்டது.
நேற்று ஆவணி முதல் பார்வை தரிசனத்திற்காக கோயில் நடை அதிகாலை 4:00 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், கோமாதா பூஜைக்கு பிறகு அம்மனுக்கு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.
இங்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.