உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உன்னால் சாதிக்க முடியும்: சாணக்கியர்

உன்னால் சாதிக்க முடியும்: சாணக்கியர்

* கடவுள் அருள் இருந்தால் மட்டுமே உன்னால் சாதிக்க முடியும்.
* நன்றாகப் படி. அதுவே உன்னை காப்பாற்றும்.   
*  உழைப்பால் கிடைத்த பணமே சிறந்தது.
* துன்பத்தில் துணையாக இருப்பவர்களே நல்ல உறவினர்கள்.  
* பெரியவர்கள் கோபப்பட்டால் அதில் அர்த்தம் இருக்கும்.
* எதிலும் தயக்கம் கொள்ளாதே.
* பிறருடைய தயவில் வாழ்வது கோழைத்தனம்.
* ஆற்றுநீர் போல உனது லட்சியத்தை நோக்கி ஓடு.  
* எப்போதும் விடாமுயற்சி செய். நீயும் அறிஞனாகலாம்.
* நல்லவரோடு நட்பு கொள். உன் வாழ்வு பிரகாசமாகும்.
* எதையும் கூச்சப்படாமல் கற்றுக்கொள். வாழ்வில் முன்னேறலாம்.
* மனதில் நேர்மை இருந்தால் எதையும் சாதிக்கலாம்.
* பிறருக்கு அடிமையாக வாழாதே. உழைத்து சாப்பிடு.  
* உன் கஷ்டத்திலும் உதவி செய்பவனே நல்ல நண்பன்.
* ஒருவர் செய்த உதவியை மறக்காதே.  
* பொய் பேசினால் பிரச்னையில் சிக்குவாய்.  
* உயர்வதும், தாழ்வதும் உன் பேச்சில்தான் உள்ளது.
* மது அருந்துவதை விட கொடிய பாவம் வேறில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !