உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆவணி மூல திருவிழாவிற்காக மதுரைக்கு புறப்பட்டார் மாணிக்கவாசகர்

ஆவணி மூல திருவிழாவிற்காக மதுரைக்கு புறப்பட்டார் மாணிக்கவாசகர்

மேலூர்; மதுரையில் நடைபெறும் ஆவணி மூல திருவிழாவிற்காக திருவாதவூர் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலில் இருந்து புறப்பட்ட மாணிக்கவாசகர் மாலை மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலை அடைந்தார். இன்று ஆக. 23 ஆடி வீதி 16 கால் மண்டபத்தில் நரியை பரியாக்கிய திருவிளையாடல், ஆக. 24 பிட்டு தோப்பில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிழாவில் கலந்து கொள்கிறார். ஆக. 25 திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியுடன், மாணிக்கவாசகர் கன்னிகா பரமேஸ்வரி மண்டபத்தில் எழுந்தருளுகிறார். ஆக. 26,ஆக. 27 மீனாட்சி சுந்தரேஸ்வரருடன் திருவீதி உலா நடைபெறும். அதனை தொடர்ந்து ஆக.28 விடைபெறும் மாணிக்கவாசகர் பல்வேறு மண்டகப்படிகளில் தங்கி பக்தர்களுக்கு அருள் பாலித்தபடி செப். 1 கோயிலை வந்தடைகிறார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி, இணை, உதவி ஆணையர்கள் செல்லத்துரை, மெய்வேல், பேஸ்கார் ஜெயப்பிரகாஷ் செய்திருந்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !