உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நாலாயிர திவ்ய பிரபந்தம் படிக்கும் நிகழ்ச்சி

செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நாலாயிர திவ்ய பிரபந்தம் படிக்கும் நிகழ்ச்சி

செஞ்சி; செஞ்சிக்கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரம் படிக்கும் நிகழ்ச்சி துவக்க விழா நடந்தது.


செஞ்சிக்கோட்டை ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கட்ரமணனர் கோவிலில் 9 நாள் நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரம் படிக்கும் நிகழ்ச்சி நேற்று துவங்கியது.இதை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கட்ரமனருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு அலங்காரம் செய்தனர். ஸ்ரீரங்க பூபதி கல்லூரி தாளாளர் ரங்கபூபதி குத்து விளக்கேற்றி பாசுரம் படிப்பதை துவக்கி வைத்தார். விழா ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வைகை தமிழ்செல்வன் வரவேற்றார். டாக்டர் ரமேஷ் பாபு முன்னிலை வகித்தார். காலை 9 மணி முதல் 2 மணி வரை சுதர்சனம் பாகவதர் தலைமையில் 200 க்கும் மேற்பட்ட பாகவதர்கள், ஆண்டாள் கோஷ்டியினர் நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்கள் படித்தனர். விழா குழுவினர் ஜெயந்தி தமிழ்செல்வன், சீனுவாசன், சிவா, வழக்கறிஞர் சக்திவேல், ஆசிரியர் ரங்கநாதன் மற்றும் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. வரும் 30 ம் தேதி வரை தினமும் பாசுரம் படிக்கும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !