தயாபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் பாலாலய பூஜை
ADDED :5 days ago
மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பாலாலய பூஜை விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மானாமதுரை தயாபுரம் பஸ் ஸ்டாப் அருகே உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் கடந்த 1996 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து தற்போது கும்பாபிஷேகம் நடத்துவதற்காக நேற்று காலை கோவிலில் பாலாலய பூஜைக்காக அம்மனுக்கு அதிகாலை 18 வகையான மூலிகை பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கோயில் முன்பாக அர்ச்சகர் செல்லப்பா தலைமையில் ஏராளமான சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கடங்களை வைத்து ஹோமங்களை வளர்த்தனர்.
பின்னர் கோயில் டிரஸ்டி சுப்ரமணியன்,ஸ்தபதி பாண்டி தலைமையிலான ஊழியர்கள் திருப்பணிகளை துவக்கினர்.விழாவில் தயாபுரம், தயாநகர், உடைகுளம், எம்.ஜி.ஆர்., நகர்,சிப்காட் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.