சிதம்பர விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
தேவகோட்டை சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயில் நகரின் மைய பகுதியில் உள்ளது. 229 ஆண்டுகள் பாரம்பரியமிக்க காலில் சிலம்புடன் கூடிய சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயிலில் மராமத்து திருப்பணிகள் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பூஜைகளை தொடர்ந்து ஆறு காலங்கள் யாகபூஜை நடைபெற்றது.
லட்சுமி பூஜை, கோமாதா பூஜை நடந்தது. நேற்று காலை யாக பூஜை பூரணாகுதியை தொடர்ந்து கடம் புறப்பாடு ஊர்வலம் நடந்தது. இதனைத் தொடர்ந்து ஓரே நேரத்தில் ராஜகோபுரம், மூலஸ்தானம், முருகன் விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து சிலம்பணி சிதம்பர விநாயகருக்கு மகா அபிஷேகம், பரிவார சுவாமிகளுக்கு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், அறங்காவலர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் கும்பாபிஷேகத்தை கண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.