உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நோய் தீர்க்கும் முருக மந்திரம்

நோய் தீர்க்கும் முருக மந்திரம்

எத்தகைய பிரச்னைகளானாலும், அதை கந்தனிடம்  வைத்து முறையிட்டால் போதும், அந்த பிரச்னைகளை  எல்லாம் தீர்த்து வைப்பார் முருகப்பெருமான். தீராத  நோய்களை எல்லாம் தீர்த்து வைப்பார் என்கிறார்கள்,  ஆச்சார்யப் பெருமக்கள்.

சூரனை அழித்த முருகப்பெருமான், சூரனை மட்டுமல்ல...  நம் நோய்களையும் வல்லமை கொண்டவர். நோய்  தீர்க்கும் மருத்துவனாகவே திகழ்பவர். இம்மைக்கும்  மறுமைக்குமாக அருளக்கூடியவர் முருகக் கடவுள் என்று  போற்றுகின்றனர். ஆறுபடை வீட்டு நாயகன், வினைகள்  அனைத்தையும் தீர்த்து வைப்பான் என்று, சிலிர்ப்புடன்  தெரிவிக்கிறார்கள் பக்தர்கள்.

முருக மந்திரத்தை தொடர்ந்து ஜபித்து வந்தால், தீராத  நோயும் தீரும். இந்த மந்திரத்தை உடல்நிலை  சரியில்லாதவர்கள் உச்சரிக்க முடியுமெனில், இந்த  மந்திரத்தை ஜபிக்கலாம். இயலாதவர்களெனில்  அவர்களுக்காக எவர் வேண்டுமானாலும், இந்த  மந்திரத்தை சொல்லி ஜபிக்கலாம்.

அது போல முருகப்பெருமான் குடி கொண்டிருக்கும்,  கோவிலுக்கு சென்று, நோய்வாய்ப் பட்டவர்களுக்காக  முருகக் கடவுளின் சன்னதியில் நின்று, இந்த  மந்திரத்தைச் சொல்லுங்கள்.


முருகப்பெருமானின் மந்திரம்


ஓம் பாலசுப்பிரமணிய

மஹா தேவி புத்ரா

சுவாமி வரவர சுவாஹா!


இந்த மந்திரத்தை எத்தனை முறை முடியுமோ, அந்த  அளவுக்கு மந்திரத்தை சொல்லுங்கள்.  முருகப்பெருமானுக்கு செவ்வரளி மாலை சாத்துங்கள்.  மேலும் இந்த மந்திரத்தை எந்த நாளில்  வேண்டுமானாலும் சொல்லலாம். செவ்வாய்,  வெள்ளிக்கிழமைகள், சஷ்டி, கார்த்திகை நட்சத்திர தினம்  என்று, இந்த நாட்களில் சொல்வது இன்னும்  வலிமையாக்கும்.

தொடர்ந்து இந்த மந்திரத்தை சொல்லி ஜபித்து வந்தால்,  தீராத நோயும் தீரும். சகல தோஷங்களும் விலகும்.  எதிர்ப்புகள் எல்லாம் தவிடு பொடியாகும். வீடு, மனை,  யோகம் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சாரியப்  பெருமக்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !