பொக்கிஷ மா காளியம்மன் கோயிலில் பால்குட விழா
ADDED :9 hours ago
திருப்புத்துார்: திருப்புத்துார் மேலரதவீதி பொக்கிஷ மா காளியம்மன் கோயில் பால்குட விழா நடந்தது. கடந்த ஆக.18ல் காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து தினசரி மாலையில் சிறப்பு பூஜை நடந்து அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடந்தன. நேற்று காலை 8:00 மணிக்கு கோட்டைக்கருப்பர் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வர வில்வ விநாயகர், பொக்கிஷ மாகாளியம்மன் மற்றும் மகாமுனீஸ்வரருக்கு அபிஷேகம் நடந்தது. முனீஸ்வரருக்கு வெள்ளி அங்கி அணிவித்தும், காளியம்மனுக்கு அலங்காரம் செய்தும் தீபாராதனை நடந்தது.