உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மகளத்துார் செல்வ விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை

அம்மகளத்துார் செல்வ விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை

கள்ளக்குறிச்சி: அம்மகளத்துார் செல்வ விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜை நேற்று முன்தினம் நடந்தது. சின்னசேலம் அடுத்த அம்மகளத்துார் செல்வ விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை நடந்தது. நிகழ்ச்சியையொட்டி மூலவர் செல்வ விநாயகருக்கு பால், தயிர், இளநீர், தேன் உட்பட 16 வகையான திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து வைக்கப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதணை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !