உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநெல்வேலி எட்டெழுத்து பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு வழிபாடு

திருநெல்வேலி எட்டெழுத்து பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு வழிபாடு

திருநெல்வேலி: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு திருநெல்வேலி எட்டெழுத்து பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 


திருநெல்வேலி உடையார்பட்டி அருகில் அருகன்குளம் என்ற கிராமத்தில் எட்டெழுத்து பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த இடத்தை தர்மபதி என்றும் அழைக்கின்றனர். இக்கோவிலில் இன்று கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இன்று கிருஷ்ண ஜெயந்தியின் போது கிருஷ்ண கலய பிரசாதம் வழங்கப்படும். பக்தர்கள் அந்த கலயத்தை வீட்டுக்கு வாங்கிச் சென்று அதில் சிறிது தங்கம் வெள்ளி நாணயங்கள் போட்டு அதை பூஜை அறையில் வைத்து வழிபடுகிறார்கள். இதனால் வீட்டில் சுபிட்சம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !