உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை வேணுகோபால சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்

கோவை வேணுகோபால சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்

கோவை; கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு கோவை கணபதி வேணுகோபால சுவாமி கோவிலில் கடந்த 2ம் தேதி முதல் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. முதல் நிகழ்வாக காலை 7 மணி அளவில் ஹோமம் நடந்தது. இதில் கலச ஸ்தாபனம் லட்சார்ச்சனை ஆகியன நடந்தது. தொடர் நிகழ்வாக வியாழக்கிழமை அன்று காலை 7 மணிக்கு பிரச்சன மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோகுலாஷ்டமி தினமான இன்று வெள்ளிக்கிழமை காலை ஹோமம் அதைத் தொடர்ந்து சுவாமிக்கு திருமஞ்சனம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் உற்சவமூர்த்தி பாமா ருக்மணி சமேதராக சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கிருஷ்ணரை வழிபட்டனர். நிறைவு நாள் நிகழ்வாக நாளை சனிக்கிழமை காலை சிறப்பு பூஜையும் அதனை தொடர்ந்து இரவு 7 மணி அளவில் உரியடி உற்சவம் மற்றும் உற்சவர் திருவீதி உலா நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நிகழ்ச்சிகள் நடக்கும் நான்கு நாட்களும் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !