உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசி காட்டு மாரியம்மன் கோவிலில் மஹா சண்டி ஹோமம் துவங்கியது

அவிநாசி காட்டு மாரியம்மன் கோவிலில் மஹா சண்டி ஹோமம் துவங்கியது

அவிநாசி: அவிநாசி ராயம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ காட்டு மாரியம்மன் கோவில் ஐந்தாம் ஆண்டு கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மஹா சண்டி ஹோமம் துவங்கியது.


அவிநாசி ராயம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ காட்டு மாரியம்மன் கோவிலில் ஐந்தாம் ஆண்டு கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மஹா சண்டி ஹோமம் நேற்று ஸ்ரீ கணபதி ஹோமம், ஸ்ரீ மகாலட்சுமி ஹோமம்,திரவியாஹூதி, ஸ்ரீ செல்வ மகாகணபதிக்கு கலச அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. பின்னர் மஹா சண்டி கலச ஆவாஹனம்,சுமங்கலி,கன்யகா பூஜைகள், பைரவர் பூஜை ஆகியவை நடைபெற்றது. இன்று இரண்டாம் கால யாக பூஜையில் அத்தியாய ஹோமங்கள், வஸ்திர சமர்ப்பணம், பூர்ணாஹூதி,ஸ்ரீ காட்டு மாரியம்மனுக்கு கலசாபிஷேகம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கலசாபிஷேகம், தீபாராதனை,பிரசாதம் வழங்குதல் நடைபெறுகிறது. மஹா சண்டி ஹோமம் கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ராஜசரவண மாணிக்கவாசக குரு தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !