பழநி யோகேஸ்வரர் கோயிலில் வருடாபிஷேகம்; திருக்கல்யாண உற்ஸவம்
பழநி: பழநி சித்தாநகர்,புது நகர் பகுதியில் எழுந்தருளியுள்ள யோகேஸ்வரர் கோயிலில் வருடாபிஷேகம் திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது.
பழநி, சித்தா நகர், புது நகர் பகுதியில் யோகேஸ்வரர் ஞானானாம்பாள் திருக்கோயில் உள்ளது. நேற்று காலை 9:00 மணிக்கு வருடாபிஷேகம் துவங்கியது. இதில் விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், கணபதி ஹோமம் ருத்ர ஹோமம் ஆகியவை நடைபெற்றது. ஹோமத்தில் வைக்கப்பட்ட கலச நீர் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது. வருடாபிஷேகத்தை முன்னிட்டு மாலை 6:00 மணிக்கு மங்கள வாத்தியத்துடன் யோகேஸ்வரர் ஞானாம்பாள் திருக்கல்யாண உற்ஸவம் துவங்கியது. சீர்வரிசை அழைத்து வருதல் நடைபெற்று இரவு 7:30 மாங்கல்யதாரணத்துடன் திருக்கல்யாணம் நடந்தது. அதன் பின் சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.